எத்தனையோ அறிமுகங்கள்...
அத்தனை அறிமுகங்களும்
உன்னைப் போல்

என் ஆன்மாவைத் தொட்டதில்லை!
நமது மூன்றாண்டு கால
நட்பை எண்ணிப் பார்க்கிறேன்...
அந்த இனிய நாட்கள் யாவும்
காலத்தால் அழியா காவியங்கள்!
காலங்கள் மாறலாம்;
கனவுகள் கூடலாம்;
ஒவ்வொரு கனவிலும்
நிஜங்களின் நிழல்கள்!
இரவின் மடியில்
நட்சத்திரங்கள் கொள்ளும் அன்பு
நிஜம் என்றாலும்,
வெகுதூரம் என்பதுதான் உண்மை!
அதுபோல் நம் நட்பும்
வெகுதூரம் ஆகிவிடும் என்றாலும்
பிரியாத வரம் கேட்போம்!

No comments:
Post a Comment